தனவிருத்தி தரும் குபேரர் விரத முறை
ஒரு வளர்பிறை புதன்கிழமை அதிகாலை 5 மணியில் இருந்து 6 மணிக்குள் இந்தவிரதமுறையைத் தொடங்க வேண்டும். ஒரு மஞ்சள் நிற விரிப்பில் வடக்கு முகமாக அமர்ந்து, தமது குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கிவிட்டு ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்.
தமக்கு முன்பாக ஒரு சிறு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் சங்கு இருந்தால், அதில் சிறிது தீர்த்தம் விட்டு வைத்துக்கொள்ள வேண்டும். ஜபம் செய்ய தாமரை மணி மாலை அல்லது துளசி மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும்.
'ஓம் ஸ்ரீம் மகா லஷ்ம்யை ஸ்வாஹா' என்ற மந்திரத்தை 108 முறை ஜப மாலை கொண்டு ஜபம் செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடம், ஒரு குறிப்பிட்ட நேரம், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை என்ற முறையில் தினமும் இதனை செய்து வந்தால் நிச்சயம் ஒருவரது பொருள் வளம் பெருகும்.
ஜபம் பூர்த்தியான பிறகு சங்கில் உள்ள தீர்த்தத்தை அருந்திட வேண்டும். இவை தவிர ஸ்ரீ மகாலட்சுமியின் மூல மந்திரம், ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ குபேர ஸ்துதி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு ஆகியவற்றின் மூலமாகவும் ஒருவரது தனயோகம் பெறும் அதிர்ஷ்டத்தை விருத்தி செய்து கொள்ளலாம்.
'ஓம் ஸ்ரீம் யஷாய குபேராய வைஸ்ரவனாய தன தான்யாதி பதயே தன தான்ய சம்ரித்திம்மே தேஹி தாபய ஸ்வாஹா' என்ற குபேர ஸ்துதியை ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரவில் குபேர எந்திரத்தை வைத்து சொல்லி வந்தால் தன விருத்தி நிச்சயமாக ஏற்படும்.
அந்த பூஜை முறை பின்வருமாறு:-
அமாவாசை அன்று மாலையில் குளித்து தூய ஆடைகளை அணிந்து அருகில் உள்ள சிவ தலத்திற்குச் சென்று வர வேண்டும். அன்று இரவு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஸ்ரீ குபேர எந்திரத்தை வீட்டின் பூஜையறையில் அல்லது ஒரு தனியிடத்தில் ஒரு செம்பு அல்லது பித்தளை தாம்பாளத்தில் பொட்டிட்டு மலரிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மஞ்சள் நிற விரிப்பில் நாம் வடக்கு முகமாக அமர வேண்டும். அட்சதையை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். வாழைப்பழம் உள்ளிட்ட ஐந்து வகை கனி வர்க்கங்களை நிவேதனம் செய்ய வேண்டும். அத்துடன் 5 வெற்றிலைகள், (முழுமையானவை, நுனி முறியாதவை) 11 கொட்டைப் பாக்குகள், 11 ஏலக்காய்கள் ஆகியவற்றை அதில் வைக்க வேண்டும்.
தூப, தீப நைவேத்திய ஆராதனைகள் முடிந்த பிறகு மேற்கூறிய ஸ்துதியை 108 முறையோ அல்லது 1008 முறையோ சொல்ல வேண்டும். அதன்பின் நைவேத்தியங்களை வீட்டில் உள்ளவர்களுக்கு பிரசாதமாகத் தரலாம். ஒரு மஞ்சள் துணியில் அட்சதை, வெற்றிலை, பாக்கு, ஏலக்காய் ஆகியவற்றை சிறு மூட்டையாகக் கட்டி, பொட்டிட்டு அதைப் பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த அமாவாசை தினத்தன்று இது போல் பூஜை செய்து முடித்து புதிய மஞ்சள் துணியில் உள்ளவற்றை பணப்பெட்டியில் வைத்துவிட்டு, முன்பு வைத்ததை வெளியில் எடுத்து வைத்திருந்து அடுத்த நாள் காலையில் ஏதாவது ஒரு நீர் நிலைகளில் சேர்த்துவிட வேண்டும். மேலும், இன்னும் பற்பல சூட்சுமமான மந்திர வழிபாட்டு முறைகள் பொருளாதாரம் சார்ந்து நிறைய உள்ளன.
அவையாவுமே அனைவருக்கும் பொருந்தாத நடைமுறை நிலைகளை உள்ளடக்கியவை. காரணம், ஒவ்வொருவரது ஜனன கால கிரக அமைப்பு நிலைகள், ஒருவருக்கொருவர் வித்தியாசமான நிலைகளில் அமைந்து அவரவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கைச் சூழல்கள் அமைந்திருக்கும்.
அனைவருக்கும் பொதுவான, மங்களகரமான, சுப நிலைகளை உறுதியாகத் தரக் கூடிய வழிமுறைகளில் மேற்கூறியவையும் முக்கியப்பங்கை வகிக்கின்றன என்பது அனுபவரீதியானதாகும். இங்கு நாம் கண்ட வழிமுறைகள் யாவுமே பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருபவையே ஆகும். நமக்குப் பொருந்தும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் நாம் நிச்சயமாக வாழ்வில் மேன்மை அடையலாம்.

No comments:
Post a Comment